முக்கிய நேரத்தில் விலகும் பட்லர் - சிக்கலில் குஜராத்
ஐபிஎல் தொடரில் ஜாஸ் பட்லருக்கு ( Jos Buttler ) மாற்றாக இலங்கை வீரர் குசல் மெண்டிஸை (Kusal Mendis ) குஜராத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கிலாந்து தேசிய அணியில் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரில் இருந்து பட்லர் விரைவில் விலக உள்ளார். பிளே-ஆஃப் சுற்றில் பட்லரால் விளையாட முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் அவருக்கு மாற்றாக இலங்கை பேட்டர் குசல் மெண்டிஸை 75 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. மே 26ம் தேதி குஜராத் அணியில் குசல் மெண்டிஸ் இணைய உள்ளார்.
Next Story
