

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் களமிறங்கும் பிரேசில் அணிக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள மைதானத்திற்கு பிரேசில் அணி வீரர்கள் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டு, மேள தாளத்துடன் வரவேற்பு அளித்தனர். காலிறுதியில் பிரேசில் அணி வெற்றி பெற அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.