பிக்பாஷ் டி20 லீக் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி சாம்பியன்

பிக்பாஷ் டி20 லீக் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி சாம்பியன்
x

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் டி20 தொடரில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஹோபர்ட்டில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணியுடன் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மோதியது. முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பேட் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஹோபர்ட் அணி வீரர் மிட்சல் ஓவன் 108 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். இதன்மூலம் நேதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, முதல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்