பிக்பாஷ் லீக் டி20 - ஹோபர்ட் ஹரிக்கேன்ஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கு, ஹோபர்ட் ஹரிக்கென்ஸ் தகுதிபெற்றது. ஹோபர்ட்டில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் ஹோபர்ட் ஹரிக்கென்ஸ் மற்றும் சிட்னி சிக்சர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஹோபர்ட் ஹரிக்கென்ஸ், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த சிட்னி சிக்சர்ஸ் 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஹோபர்ட் ஹரிக்கென்ஸ், நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. தோல்வியடைந்த சிட்னி சிக்சர்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு செல்ல, சேலஞ்சர் போட்டியில் மற்றொரு வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

