அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிச் சுற்றில் செரினா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார். நியூயார்க் நகரில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறதிப் போட்டியில் 19 வயது கனடா வீராங்கனை Bianca Andreescu விடம் செரினா வில்லியம்ஸ் பலப்பரீட்சை நடத்தினார். போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பியான்கா, 6க்கு 3, 7க்கு 5 என்ற நேர் செட் கணக்கில் வென்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். 2017ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கூட செரினா வெல்லவில்லை.