படுதோல்வி எதிரொலி - இடியை இறக்கிய BCCI
உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் பங்கேற்பது உட்பட இந்திய ஆடவர் அணிக்கு பிசிசிஐ கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், அணியின் செயல்பாடு குறித்து பிசிசிஐ அண்மையில் விவாதித்தது.
இந்த கூட்டத்தில், அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும் எனவும்,
வெளிநாடு தொடர்களின் போது குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே குடும்பத்தார் அனுமதிக்கப்படுவர் எனவும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இதோடு, போட்டி நடக்கும் இடத்திற்கு தனியாக செல்லாமல், கட்டாயம் அணியுடன் இணைந்து செல்லவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், அனுமதியின்றி தங்களது மேலாளர்கள், உதவியாளர்களை வெளிநாடு தொடர்களுக்கு அழைத்து செல்லக்கூடாது,
தொடர் நடக்கும்போது விளம்பரங்களில் நடிக்கக்கூடாது, வீரர்களுக்கான லக்கேஜ் எடை குறைப்பு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
