'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெற்ற மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின்

x

மும்பையில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர விழாவில், சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வருடாந்திர விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு சி.கே. நாயுடு பெயரில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிசிசிஐ கவுரவித்துள்ளது. சமீபத்தில் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரவிச்சந்திரன் அஸ்வினிற்கு பிசிசிஐ சிறப்பு விருதுடன், கேடயம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்