ஜெகதீசனை உடனே இங்கிலாந்து வர சொன்ன BCCI.. தந்தை சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை

x

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை சேர்ந்த ஜெகதீசன், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமையளிப்பதாக அவரது தந்தை நாராயணன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ஜெகதீசன், ஜூலை 31ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். இதனிடையே ரிஷப் பண்டுக்கு பதிலாக ஜெகதீசன், விக்கெட் கீப்பர் - பேட்டராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஜெகதீசனின் தந்தை, கோவையை சேர்ந்த முதல் விளையாட்டு வீரராக தனது மகன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது பெருமை என்றும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி தான் தனது மகனுக்கு பிடித்தமான அணி என்றும் நெகிழ்ச்சி தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்