சபா கிளப் சாம்பியன்ஷிப்-பூட்டானை வீழ்த்தி, தமிழ்நாடு வெற்றி

x

சென்னையில் நடைபெற்று வரும் சபா கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பூட்டானை வீழ்த்தி, தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. தெற்காசிய கூடைப்பந்து சங்கம் நடத்தும் சபா கிளப் சாம்பியன்ஷிப் 2025 கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள் விளையாட்ட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டியில் தமிழ்நாடு, பூட்டான் அணிகள் மோதின. இதில் 107க்கு 41 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. முன்னதாக கொழும்பு பிசி அணியும், டி ரேக்ஸ் அணியும் மோதின. இதில் 79க்கு 74 என்ற புள்ளி கணக்கில் கொழும்பு அணி வென்றது.


Next Story

மேலும் செய்திகள்