வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வங்கதேச வீரர் - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகல்

x

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து, வங்கதேச அணியின் முன்னணி வீரர் லிட்டன் தாஸ் விலகியுள்ளார். வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள லிட்டன் தாஸ், முழுமையாக குணமடையாததால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் லிட்டன் தாசுக்கு பதிலாக அனாமுல் ஹக் பிஜோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக, வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்