ஊக்க மருந்து விவகாரம் - பஜ்ரங் புனியாவுக்கு பின்னடைவு

ஊக்க மருந்து விவகாரம் - பஜ்ரங் புனியாவுக்கு பின்னடைவு
Published on

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா, பிரிஜ் பூஷணுக்கு எதிரான பாலியல் புகார்களில் நடவடிக்கை கோரி போராடியவர். ஊக்கமருந்து சோதனைக்கு ஒத்துழைக்கவில்லை என்று ஏப்ரல் மாதம் ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அவருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடையால் அக்டோபர் 28-ல் தொடங்கும் உலக மல்யுத்த போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் உள்ளதாகவும், இடைக்கால தடையை நீக்கக் கோரியும் பஜ்ரங் புனியா டெல்லி உயர்நீதிமன்றம் சென்றார். வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டது. இருப்பினும் ஊக்கமருந்து தடுப்பு ஆணைய இடைக்கால தடையை நிறுத்தி வைக்க மறுத்துவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை அக்டோபருக்கு தள்ளி வைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com