மோசமான தோல்வி - ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ரிஷப் பந்த்

x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததோடு இந்திய அணி மிக மோசமான தோல்வியை அடைந்து, ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாததற்கு ரிஷப் பந்த் மன்னிப்பு தெரிவித்துள்ளார். காயம் காரணமாக சுப்மன் கில் விலகியதால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்தே கேப்டனாக தொடர்ந்த நிலையில், அவரது கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கள் போதுமான அளவு கிரிக்கெட் விளையாடவில்லை என்பதில் வெட்கப்படுவதற்கில்லை என்று தெரிவித்துள்ள ரிஷப் பந்த், மீண்டும் ஒரு அணியாகவும் தனிநபர்களாகவும், வலுவாகவும் சிறப்பாகவும் திரும்ப நாங்கள் கடினமாக உழைப்போம் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்