ஆஸி. ஓபனில் 16 வயது வீராங்கனை ஆன்ட்ரீவா அசத்தல்

ஆஸி. ஓபனில் 16 வயது வீராங்கனை ஆன்ட்ரீவா அசத்தல்
Published on

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ரஷ்யாவைச் சேர்ந்த வெறும் 16 வயதே ஆன வீராங்கனை மிர்ரா ஆன்ட்ரீவா (Mirra Andreeva)அசத்தி வருகிறார். மகளிர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டத்தில் துனிசியாவைச் சேர்ந்த 6ம் நிலை வீராங்கனை ஒன்ஸ் ஜாபியருடன் (Ons Jabeur) ஆன்ட்ரீவா பலப்பரீட்சை நடத்தினார். இதில் 6க்கு பூஜ்யம், 6க்கு 2 என்ற செட் கணக்கில் ஜாபியரை வீழ்த்தி ஆன்ட்ரீவா அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம், மூன்றாம் சுற்றுக்கும் ஆன்ட்ரீவா தகுதி பெற்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com