

அரையிறுதிக்கு கிரேக்க வீரர் ஸ்டெஃபனோஸ் தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு கிரேக்க வீரர் STEFANOS தகுதி பெற்றுள்ளார். 20 வயதான STEFANOS 4வது சுற்றில் 6 முறை சாம்பியனான ஃபெடரை வீழ்த்தியதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டாவை 7-5, 4-6,6-4,7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஸ்டெஃபனோஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் வரலாற்றிலேயே அரையிறுதிக்கு முன்னேறிய இளம் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.