ஆஸ்திரேலிய ஓபன் - அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு செர்பிய வீரர் ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். காலிறுதிப் போட்டியில், உலகின் மூன்றாம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸை எதிர்கொண்ட ஜோகோவிச், முதல் செட்டை இழந்தாலும், அடுத்த 3 செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றினார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த போட்டியில், 4-க்கு 6, 6-க்கு 4, 6-க்கு 3, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் அல்கராஸை வீழ்த்தி அரையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி பெற்றார்.
Next Story
