ஆஸி., ஓபன் - மீண்டும் இறுதிப்போட்டியில் சபலென்கா
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இரண்டு முறை சாம்பியனான சபலென்கா அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை படோசாவை எதிர்கொண்டார். தொடக்கத்தில் தடுமாறினாலும், ஆக்ரோஷமான ஆட்டத்தால் 6க்கு 4 மற்றும் 6க்கு இரண்டு என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
Next Story
