ஆஸி. ஓபன் டென்னிஸ் - ஸ்வரெவ் அரையிறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ் (Alexander Zverev) அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பாலுடன் (Tommy Paul) ஸ்வரெவ் மோதினார். முதல் 2 செட்டுகளை ஸ்வரெவ் கைப்பற்றிய நிலையில், மூன்றாவது செட்டை டாமி பால் கைப்பற்றினார். இதையடுத்து நான்காவது செட்டை ஸ்வரெவ் எளிமையாக கைப்பற்றினார். போட்டியின் இறுதியில் 7-6, 7-6, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதி போட்டிக்கு ஸ்வரெவ் தகுதிபெற்றார்.
Next Story

