ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்றார் 22 வயது இத்தாலி வீரர் சின்னர்

ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் சாம்பியன் பட்டம் வென்றார் 22 வயது இத்தாலி வீரர் சின்னர்
Published on

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் 22 வயதே ஆன இத்தாலி வீரர் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்று அதகளப்படுத்தியுள்ளார்.

மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தரவரிசையில் 4ம் இடத்தில் இருக்கும் இளம் வீரர் யானிக் சின்னரும், தரவரிசையில் 3ம் இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவும் பலப்பரீட்சை நடத்தினர். ஆட்டத்தின் முதல் 2 செட்களை 6க்கு 3 என்ற புள்ளிகள் கணக்கில் மெத்வதேவ் வெல்ல, மெத்வதேவ் சாம்பியன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த செட்களில் அதிரடியாக ஆடி யானிக் சின்னர் கம்-பேக் கொடுத்தார். 6க்கு 4, 6க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் அடுத்தடுத்த செட்களை சின்னர் வசப்படுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com