ஏதென்ஸ் டென்னிஸ் தொடர் - ஃபைனலுக்கு முன்னேறிய ஜோகோவிச்
கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் நடைபெற்றுவரும் ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனி வீரர் ஹாஃப்மேனை 6க்கு 3, 6க்கு 4 என்ற நேர் செட்களில் ஜோகோவிச் சாய்த்தார். இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் முசெட்டியுடன் ஜோகோவிச் மோதவுள்ளார்.
Next Story
