

முன்னதாக நடைபெற்ற மூன்று சுற்றுகளில் மலேசிய வீரர் அஸ்மான் முதலிடத்தில் உள்ளார். வெறும் ஒரு புள்ளி பின்னடைந்து சைதி இரண்டாம் இடத்திலும், அவரை தொடர்ந்து இந்தோனேசிய வீரர் திரிலக்ஷனா மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதனால் போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து 5 ஆம் சுற்று இந்தோனேசியாவிலும், இறுதி சுற்று தாய்லாந்திலும் நடைபெற உள்ளது.