ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்.. தங்கம் வென்றார் இளவேனில்
ஆசிய துப்பாக்கி சுடுதல் - தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இளவேனில் வாலறிவன், 253.6 புள்ளிகள் பெற்று தங்க பதக்கம் வென்றுள்ளார். இந்த சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 6 தங்க பதக்கம் உட்பட 8 பதக்கங்கள் வென்றுள்ளனர்.
Next Story
