ஆசிய போட்டிகள் - இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது..?

ஆசிய போட்டிகள் - இந்தியா எத்தனையாவது இடத்தில் இருக்கிறது..?
x

19ஆவது ஆசிய போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தங்கத்தை மட்டுமே குறிவைத்து அடித்து கொண்டிருக்கும் சீனா, இதுவரை 200 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம் என 382 பதக்கங்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியாவும் தன் பங்கிற்கு பதக்க வேட்டையாடி வருகிறது. அந்த வகையில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் இருக்கிறது. 186 பதக்கங்களுடன் ஜப்பான் 2ஆவது இடத்திலும் 190 பதக்கங்களுடன் கொரியா 3ஆவது இடத்திலும் உள்ளன.


ஆசிய விளையாட்டில் பதக்க பட்டியலில் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகளின் விவரம்


1. சீனா- 201 தங்கம், 111 வெள்ளி, 71 வெண்கலம்: மொத்த பதக்கங்கள் 382

2. ஜப்பான்: 52 தங்கம், 67 வெள்ளி, 69 வெண்கலம்: மொத்த பதக்கங்கள்- 188

3. தென்கொரியா: 42 தங்கம், 59 வெள்ளி, 89 வெண்கலம் - மொத்த பதக்கங்கள்- 190

4. இந்தியா: 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்: 107

5. உஸ்பெஸ்கிதான்: 22 தங்கம், 18 வெள்ளி, 31 வெண்கலம்- மொத்த பதக்கங்கள்: 71


🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023

மேலும் விபரங்களுக்கு கிளிக் செய்யவும்Next Story

மேலும் செய்திகள்