ஆசிய போட்டி - இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி வெண்கலம்

ஆசிய போட்டி - இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி வெண்கலம்

ஆடவர் பேட்மிண்டன் அரையிறுதியில், இந்திய அணி சீனாவிடம் 1க்கு 3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.

​அரையிறுதி போட்டியில், இந்தியாவின் நட்சத்திர இரட்டையர் ஜோடியான சாத்விக் - சிராக் ஜோடி உலகின் முன்னணி சீன ஜோடியான லியாங் - வாங் ஜோடியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது.

ப்ரீத்

இருப்பினும், ஒற்றையர் மற்றும் மற்ற இரட்டையர் பிரிவுகளில் இந்திய வீரர்கள் தோல்வியடைந்ததால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தனர். தொடர்ச்சியாக இரண்டாவது ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

Thanthi TV
www.thanthitv.com