ஆசிய தடகள தொடர் - வெண்கலம் வென்ற தமிழக வீரர் செர்வின்

தென்கொரியாவில் தொடங்கியுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை தமிழக வீரர் செர்வின் செபாஸ்டியன் வென்று தந்துள்ளார். ஆடவர் 20 கிலோ மீட்டர் ரேஸ் வாக் போட்டியில் கலந்துகொண்ட செர்வின் செபாஸ்டியன், பந்தய தூரத்தை 1 மணி நேரம் 21 நிமிடம் 13 வினாடிகளில் கடந்து மூன்றாம் இடம் பிடித்தார். இதன்மூலம் வெண்கலப் பதக்கத்தையும் செர்வின் செபாஸ்டியன் வசப்படுத்தினார். பதக்கம் வென்ற செர்வின் செபாஸ்டியனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com