

ஆசிய போட்டி மகளிருக்கான கபடி இறுதிச் சுற்றில் ஈரானிடம் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியை தழுவியது. பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி
27க்கு24 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது. ஆசிய போட்டிகள் வரலாற்றில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வெல்லாமல் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.