ஆசியக்கோப்பை ஹாக்கி - இறுதிப்போட்டியில் இந்தியா
ஆசியக்கோப்பை ஹாக்கி - இறுதிப்போட்டியில் இந்தியா
ஆசியக்கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறி உள்ளது...
பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர்-4 சுற்றின் கடைசி போட்டியில் சீனாவை இந்தியா எதிர்கொண்டது. போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதன்மூலம் முதல் பாதி ஆட்டத்தில் 3க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது... தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். ஒருபுறம் இந்தியா கோல்மழை பொழிய, பதிலுக்கு ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் சீனா திணறியது. இறுதியில் ஆட்டநேர முடிவில் 7க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் 2 கோல்கள் அடித்தார். இந்த வெற்றிமூலம் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது., இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தென்கொரியா உடன் இந்தியா மோதவுள்ளது.
