ஆசியக் கோப்பை ஹாக்கி - சீனாவை சாய்த்த இந்தியா
ஆசியக்கோப்பை ஹாக்கி தொடக்க போட்டியில் சீனாவை இந்திய அணி எளிதில் வீழ்த்தியது. பீகாரின் ராஜ்கிர் மைதானத்தில் போட்டி தொடங்கியதில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது. இரு அணிகளும் மாறி மாறி கோல் அடித்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் Harmanpreet Singh ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்..குறிப்பாக, 33வது நிமிடத்தில் இந்திய அணி 3 கோல் அடித்து முன்னிலையில் இருக்க, அதன்பிறகு சீனா அடுத்தடுத்து 2 கோல் அடித்ததால் ஆட்டம் திக் திக் என நகர்ந்தது. இறுதியாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் 47வது நிமிடத்தில் பெனால்டி ஷூட்-அவுட்டை நன்கு பயன்படுத்தி கோலாக மாற்ற இந்திய அணி 4க்கு 3 என்ற கோல் கணக்கில் வெற்றியை ருசித்தது.
Next Story
