ஆஷஸ் 3வது டெஸ்ட் : Snickometer-ஆல் மைதானத்தில் சலசலப்பு
ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில, ஸ்னிக்கோ மீட்டர் செயல்பட்ட விதம் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கு...ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டியில Snickometer-னால மைதானத்துல ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டது. 2ஆம் நாள் ஆட்டத்துல ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் பவுளிங்ல, இங்கிலாந்து பேட்டர் ஜேமி ஸ்மித் அடிச்சு catch பிடிக்கப்பட்டது.
ஆனா, அதுக்கு அம்பயர் நாட் அவுட் கொடுத்த உடனே ஆஸ்திரேலிய வீரர்கள் கோவத்துல கொதிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இதையடுத்து, DRS முறைப்படி Snickometer தொழில்நுட்பம் மூலம் பாத்ததுல, அவர் கையில பந்து படல்லன்னு உறுதி செய்யப்பட்டது. இது மிகவும் தவறான முடிவு அதோட கிரிக்கெட்ல மிகவும் மோசமான கருவி Snickometer தான்னு மிச்செல் ஸ்டார்க் பதிவு செஞ்சுருக்காரு. ஏற்கனவே இதே முறைப்படி அலெக்ஸ் கேரிக்கு சர்ச்சைக்குரிய வகையில நாட் அவுட் கொடுக்கப்பட்டது, ரசிகர்கள் மத்தில அதிருப்திய கிளப்பியிருக்கு.
