"அங்கத் வேடிக்கை பொருள் அல்ல எதுவும்"பும்ராவின் மனைவி காட்டம்
தங்கள் மகன் அங்கத் பும்ரா குறித்து சமூக வலைதளங்களில் பேசப்படும் கருத்துகளை துளியும் விரும்பவில்லை என மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ராவின் மனைவியும் வர்ணனையாளருமான சஞ்சனா கணேசன் கூறியுள்ளார். லக்னோ - மும்பை இடையிலான போட்டியின்போது சஞ்சனா மற்றும் அங்கத் மைதானத்தில் இருந்த புகைப்படங்கள் வைரலாகின. அங்கத் குறித்து ரசிகர்கள் எதிர்மறையாக பதிவிட்டனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சஞ்சனா, அங்கத் வேடிக்கை பொருள் அல்ல என்றும் அங்கத் குறித்து உங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
Next Story
