ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு

ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே ஓய்வு
Published on
ஆஸ்திரேலிய ஓபன் தொடருடன் ஓய்வு பெற உள்ளதாக பிரபல டென்னிஸ் வீரர் ஆன்டி முர்ரே கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.மெல்போர்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 20 மாதங்களாக இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்துடன் விளையாடி வருவதாக தெரிவித்தார். இதற்கு மேலும் தம்மால், வலியை தாங்கி கொள்ள முடியாது என்று கண்ணீர் மல்க தெரிவித்த ஆன்டி முர்ரே ஆஸ்திரேலிய ஓபன் தொடரே தனது கடைசி போட்டியாக இருக்கலாம் என்று தெரிவித்தார். பிரிட்டனை சேர்ந்த ஆன்டி முர்ரே 3 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com