இதுவரை வேறு எந்த கேப்டனுக்கும் நடக்காத ஒரு துரதிருஷ்ட சம்பவம்.. பாண்டியா மனதை நொறுக்கிய மும்பை Fans

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கேலி செய்யும் விதமாக ரசிகர்கள் கூச்சலிட்டனர். டாஸின்போது பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டது. அப்போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு அதிருப்தியை வெளிப்படுத்தினர். ஹர்திக் பாண்டியா அணி மாறியதில் குஜராத் ரசிகர்களுக்கும், கேப்டனாக பொறுப்பேற்றதில் ஏராளமான மும்பை ரசிகர்களுக்கும் உடன்பாடு இல்லை எனக் கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் அகமதாபாத்தில் அரங்கேறி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com