பறக்க போகும் பந்துகள்.. பஞ்சராக போகும் பவுலர்கள் - பழைய பன்னீர்செல்வமாக வருகிறார் ஏலியன் ABD

x

ண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஏ.பி. டிவில்லியர்ஸ்... இது குறித்து ஒரு செய்தித்தொகுப்பு...

ஆப்ரஹாம் பெஞ்சமின் டிவில்லியர்ஸ்(Abraham Benjamin de Villiers)......... கிரிக்கெட்டின் ஏலியனாக ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டவர்... மிஸ்டர் 360 (mister three sixty) ஆக கொண்டாடப்பட்டவர்.

அவர் களம் கண்டால் எட்டுத்திக்கும் பந்து பறக்கும்... மைதானத்தில் ரசிகர்களின் கோஷம் விண்ணைப் பிளக்கும்... பவுலர்களைப் பதற்றமாக்கி தொடை நடுங்கச் செய்தவர் டிவில்லியர்ஸ்...

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம், சதம், சதத்தை கடந்த அரைசதம் அடித்த சாதனை இன்றளவும் டிவில்லியர்ஸ் வசம்தான் உள்ளது. அதிரடி மன்னனாக மட்டுமின்றி களத்தில் வேங்கைபோல் பாய்ந்து பாய்ந்து, ஃபீல்டிங் செய்யும் சாகசக்காரனாகவும் அவர் வலம் வந்தார்.

வீரரா? வேற்றுக்கிரகவாசியா? என கிரிக்கெட் உலகை வியக்க வைத்த டிவில்லியர்ஸ், ஐசிசி (ICC) தொடர்களிலும் ஐபிஎல்லிலும் (IPL) கோப்பையை வெல்லாமல் முடிவுரை எழுதியது சரித்திரச்சோகம்...

கடந்த 2018ம் ஆண்டு தனது 34வது வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய டிவில்லியர்ஸ், 2021ல் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிற்கும் விடைகொடுத்தார். அதன்பின் டிவில்லியர்ஸின் ஆடுகள நினைவுகளை மட்டுமே ரசிகர்கள் அசைபோட்டு வருகின்றனர்.

ஓய்வு பெற்றாலும் மற்ற லெஜன்ட்கள்போல (legend) டிவில்லியர்ஸூம் நட்பு ரீதியிலான போட்டிகளில் களம் காண வேண்டும் என ரசிகர்கள் விரும்பி வரும் சூழலில், ரசிகர்களை உற்சாகம்கொள்ளச் செய்யும் செய்தியை டிவில்லியர்ஸ் வெளியிட்டு இருக்கிறார்.

ஆம்... தனது கிரிக்கெட் வேட்கை இன்னும் தணியவில்லை எனக்கூறி மீண்டும் களம் காணப்போவதாக அறிவித்துள்ளார் டிவில்லியர்ஸ்...

கடந்த ஆண்டு நடைபெற்ற World Championship of legends டி20 தொடரின் 2வது சீசன்,,, வருகிற ஜீலை மாதம் தொடங்க உள்ளது. இந்த தொடரில்தான், தென் ஆப்பிரிக்க லெஜன்ட்ஸ் அணிக்காக ஆடவிருப்பதாக டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார். நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 6 அணிகளைச் சேர்ந்த ஜாம்பவான்கள் இந்த தொடரில் விளையாட உள்ளனர்.

சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடி மன்னன் டிவில்லியர்ஸ் மீண்டும் களம் காண இருப்பது உறுதியாகிவிட்டது... மிஸ்டர் 360ன் மிரட்சியூட்டும் ஷாட்களை மீண்டும் ஒருமுறை பெரும் வியப்புடன் காண கிரிக்கெட் உலகம் காத்திருக்கிறது....


Next Story

மேலும் செய்திகள்