ரோகித் பெயரில் அரங்கம் - மிகப்பெரிய கவுரவம்
ரோகித் பெயரில் அரங்கம் - மிகப்பெரிய கவுரவம்
வான்கடே மைதானத்துல ஹிட்மேன் பேர்ல STAND திறந்துருக்காங்க..
இந்திய கிரிக்கெட் கேப்டனா டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று கொடுத்த ரோகித் சர்மா, பேட்டரா பல சாதனைகளை படைச்சிருக்காரு.
ரோகித்தோட சாதனைகளை கவுரவிக்குற விதமா மும்பை வான்கடே மைதானத்துல ரோகித் பெயர்ல ஒரு STAND அமைச்சருக்காங்க..
வான்கடேவுல நடந்த நிகழ்ச்சியில மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், ரோகித் சர்மாவோட குடும்பத்தினர் சேர்ந்து STAND-அ திறந்துவச்சாங்க..
சுனில் கவாஸ்கர், சச்சின் தெண்டுல்கர், விஜய் மெர்சண்ட் உள்ளிட்டோர் வரிசையில இப்ப ரோகித் சர்மா பெயர்ல STAND வந்திருக்கு.
நிகழ்ச்சியில பேசுன முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், புதிதாக திறக்கப்பட்ட ஸ்டான்ட்க்கு ரோகித் சர்மா சிக்ஸ் அடிக்குறதை பார்க்க ஆவலோட காத்திருப்பதா சொன்னாரு.
வர 21ஆம் தேதி ஐபிஎல்ல டெல்லி டீம்கூட விளையாடும்போது, தனது பேர்ல இருக்க இந்த STAND-ஐ பார்க்கபோறதை நினைச்சு பார்க்கவே செம்மயா இருக்குனு நெகிழ்ந்திருக்காரு ரோகித் சர்மா..
