மொத்த மேட்சையும் திருப்பிய ஒற்றை விக்கெட்.. Qualifier 2-ல் MI.. வெளியேறியது GT

x

சண்டிகரில் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா - பேர்ஸ்டோ (Bairstow) ஜோடி அட்டகாசமான தொடக்கம் தர, மும்பையின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 47 ரன்களில் பேர்ஸ்டோ ஆட்டமிழக்க, கேட்ச் ஆவதில் இருந்து தப்பிய ரோகித் சர்மா, சிக்சர்களைப் பறக்கவிட்டு அரைசதம் கடந்தார். சதம் அடிப்பார் என எதிர்பாக்கப்பட்ட ரோகித் சர்மா 81 ரன்களில் அவுட்டாக, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடினர். கோட்ஸி (Coetzee) வீசிய கடைசி ஓவரில் பாண்டியா 3 சிக்சர்களைப் பறக்கவிட்டார்., 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு மும்பை 228 ரன்கள் குவித்தது.


Next Story

மேலும் செய்திகள்