இந்திய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் பும்ரா பங்கேற்பு
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு வாய்ப்பளித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கு முன்னதாக, பும்ரா மூன்று ஆட்டங்களில் மட்டுமே விளையாடுவார் என்றும், ஒவ்வொரு டெஸ்டுக்கும் முன்பு அவரது பங்கேற்பு மதிப்பிடப்படும் என்றும் அணி நிர்வாகம் முன்னதாகவே குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், அணியின் கேப்டன் சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா இங்கிலாந்திற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வார் என உறுதி செய்துள்ளார்.
Next Story
