வரலாற்றில் தடம் பதித்த கில், ஜெய்ஸ்வால் - ரசிகர்களை ஏமாற்றிய சாய் சுதர்சன்

x

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் மற்றும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினர்.

லீட்ஸ் நகரில் தொடங்கியுள்ள இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஜெய்ஸ்வால் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தது. 42 ரன்களில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்க, அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய தமிழக வீரர் சாய் சுதர்சன், டக்-அவுட் (duck out) ஆகி அதிர்ச்சி அளித்தார். பின்னர் 3வது விக்கெட்டுக்கு கேப்டன் சுப்மன் கில், ஜெய்ஸ்வால் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. பவுண்டரிகளை விரட்டிய ஜெய்ஸ்வால் சதம் விளாசி 101 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் கில்லும் அற்புதமாக விளையாடி சதத்தை ருசித்தார். மறுமுனையில் அட்டகாசமாக விளையாடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 359 ரன்கள் குவித்துள்ளது. கில் 127 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்