7வது டென்னிஸ் பிரீமியர் லீக் பிரம்மாண்ட தொடக்கம்
இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 5 லீக் போட்டிகளில் விளையாடி, அதிக புள்ளிகளுடன் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும். இந்நிலையில், சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற ஹைதராபாத் ஸ்டிரைக்கர்ஸ் (Hyderabad Strikers) அணி டிஃபென்டிங் (defending) சாம்பியனாக களமிறங்கவுள்ளது.
இந்தியா மற்றும் சர்வதேச டென்னிஸ் வீரர்கள் பங்கேற்கும் 7வது டென்னிஸ் பிரீமியர் லீக் டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்குகிறது.
ஜி எஸ் டெல்லி ஏசஸ் (GS Delhi Aces), பெங்களூரு எஸ்ஜி பைப்பர்ஸ் (Bengaluru SG Pipers), சென்னை ஸ்மாஷர்ஸ் (Chennai Smashers), ராஜஸ்தான் ரேன்ஜர்ஸ் (Rajasthan Rangers), குஜராத் பான்தர்ஸ் (Gujarat Panthers), ஹைதராபாத் ஸ்டிரைக்கர்ஸ் (Hyderabad Strikers), யஷ் மும்பை ஈகில்ஸ் (Yash Mumbai Eagles) மற்றும் குர்கோன் கிராண்ட் சிலாம்மர்ஸ் (Gurgaon Grand Slammers) என எட்டு அணிகளுடன் 2018 ஆம் ஆண்டு, டென்னிஸ் பிரீமியர் லீக் தொடங்கப்பட்டது. தற்போது வரை இதே எட்டு அணிகளுடன் ஒவ்வொரு சீசனும் நடைபெற்று வருகிறது.
இந்திய டென்னிஸ் ஜாம்பவான்கள் ஆன லியாண்டர் பயஸ், சானியா மிர்சா, மகேஷ் பூபதி ஆகியோரின் ஆதரவுடன் வெற்றிகரமாக 7வது சீசனில் அடியெடுத்து வைக்கும் இந்த லீக் போட்டி, குஜராத் யூனிவர்சிட்டியில் உள்ள டென்னிஸ் ஸ்டேடியத்தில் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.