3வது ஒருநாள் போட்டி - இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
3வது ஒருநாள் போட்டி - இந்தியா 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
கில் அபார சதம் - ஷ்ரேயாஸ் ஐயர், கோலி அரைசதம்
இங்கிலாந்தை 3-0 கணக்கில் ஒயிட்வாஷ் செய்த இந்தியா
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 356 ரன்கள் குவித்தது. அபாரமாக விளையாடி சதமடித்த சுப்மன் கில் 112 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், கோலி 52 ரன்களும் எடுத்து ரன்குவிப்புக்கு உதவினர்.
தொடர்ந்து 357 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 34.2 ஓவர்களில் இங்கிலாந்து 214 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து, இந்திய அணி கோப்பையை வென்றது..
