2வது டி20 - இலங்கையை சுருட்டி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி

x

2வது டி20 - இலங்கையை சுருட்டி ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 80 ரன்களில் சுருண்டது. ஜிம்பாப்வே அணி தரப்பில் கேப்டன் சிக்கந்தர் ராசா, எவ்னஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினர். பின்னர் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 15வது ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், 3வது போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்