2வது குவாலிஃபயர் - சேப்பாக்-திண்டுக்கல் இன்று பலப்பரீட்சை

x

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது குவாலிஃபயர் போட்டியில் பாபா அபரஜித் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. திண்டுக்கல்லில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது. முதலாவது குவாலிஃபயர் போட்டியில் திருப்பூரிடம் சேப்பாக் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. எலிமினேட்டரில் திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் 2வது குவாலிஃபயர் போட்டிக்குள் நுழைந்தது. இன்றையப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடக்கூடும். இதனால் இந்தப் போட்டி மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்