Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (21.04.2026) | 11 AM Headlines | ThanthiTV
அமெரிக்கா - ஈரான் இடையேயான 2 வார தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவு பெறுகிறது...
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ஈரான் புறக்கணித்த நிலையில் இன்று முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது...
தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?
தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?...
234 தொகுதிகளிலும் தந்தி டிவி நடத்திய பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு..
திமுகவிற்கு 98... அதிமுகவிற்கு 91.... தவெகவிற்கு 2 தொகுதிகள் சாதகம்...
முழு விவரங்களை திரையில் தெரியும் QR-கோடை ஸ்கேன் செய்து தந்தி டிவியின் யூ-டியூப் பக்கத்தில் தெரிந்துகொள்ளுங்கள்...
சென்னையில் முதலமைச்சர் தீவிர வாக்கு வேட்டை
சென்னை கன்னகி நகர், வேளச்சேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்....
வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சருக்கு திமுக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
தமிழகத்தில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது....
மாநிலம் முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்....
