தமிழ்நாடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்...பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

தமிழ்நாடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்...பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு
Published on

கடந்த மாதம் 27ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பல்வேறு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார். பல ஆயிரம் கோடிகளில் முதலீடு செய்ய அந்நாட்டு நிறுவனங்களும் ஒப்புதல் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டு சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் சென்னை திரும்புகிறார். 7ம் தேதி காலை 8.30 மணியளவில் விமான நிலையம் வந்தடையும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com