``இந்தியாவில் இருந்து விரைவில்'' - விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பேட்டி
விண்வெளியில் நாட்களை கழித்த பிறகு ஈர்ப்பு விசையில் எப்படி வாழ்வது என்பதையே உடல் மறந்துவிடுகிறது என விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எஞ்சினை பற்றவைக்கும் அனுபவம் கற்பனை செய்ததை விட பெரியதாக இருந்தது என கூறினார். நான் இதுவரை கற்றுக்கொண்டது, நமது நாட்டின் விண்வெளி திட்டங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், மிக விரைவில் நமது ராக்கெட்டில், நமது மண்ணில் இருந்து மனிதர்களை அனுப்புவோம் எனவும் அவர் கூறினார். பின்னர், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்துகளை பெற்ற அவர், தனது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து தெரிவித்தார்.
Next Story
