வறுமையால் செருப்பு தைக்கும் பட்டதாரி - "இதற்காகவா கடன் வாங்கி படிக்கவைத்தேன்?"- தந்தை கண்ணீர்

பி.இ பட்டதாரி இளைஞர் ஒருவர், படித்த படிப்பிற்கு வேலை கிடக்காததால், தன் தந்தை செய்து வந்த செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்...
x

ஓவ்வொரு மனிதருக்கும் இருக்கும் கனவு, ஆசை எல்லாம் படித்து முடித்து ஒரு கெளரவமான வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கவேண்டும் என்பதுதான்...அப்படித்தான் தனது இலக்கை நோக்கி ஓட ஆரம்பித்தார், சிவகங்கையை சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்...ஆனால் எதார்த்தம் அவரை இழிவாய் பார்க்கப்படும் செருப்பு தைக்கும் இடத்தில் கொண்டு சென்று சேர்த்துவிட்டது...

வாட்டி வதைக்கும் வறுமையை காட்டிலும் செருப்பு தைப்பது ஒன்றும் அவ்வளவு கொடுமையில்லை என்றும் வருவாய்க்கு வடிகாலாகவும், தந்தைக்கு உதவியாகவும், தயக்கத்தை தூக்கியெறிந்துவிட்டு செருப்பு தைக்க தயாராகிவிட்டார் அந்த பொறியியல் பட்டதாரி.....

ஆனால், வலி, வேதனை, அவமானம் எல்லாம் தாங்கி பார்த்து பார்த்து படிக்க வைத்த பிள்ளை தன்னோடு சேர்ந்து செருப்பு தைப்பதை பார்க்க முடியாமல், இதற்காகவா உன்னை கடன் வாங்கி படிக்கவைத்தேன்... என வேதனையில் வெடிக்கிறார் இந்த அப்பாவி தந்தை ....



கார்த்திக், பட்டதாரி இளைஞர் ;

"எந்த வேலையும் கிடைக்கவில்லை" "செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபாடு"

நாம் பார்க்கும் இந்த கார்த்திக் படித்ததோ சிவில் இன்ஜினியரீங்... படித்ததும் வேலை தேடி தேடி அலைந்து ஓய்ந்த இவர், இறுதியாக ஒரு வேலையில் சேர்ந்துள்ளார்... கிடைத்த சம்பளமோ மாதம் ஐயாயிரம் ரூபாய் தான்... ! குடும்பத்திலோ வறுமை..

வறுமையை வெல்ல கார்த்தி கையிலெடுத்ததது தந்தையில் தொழிலான செருப்பு தைக்கும் தொழில், செய்யும் தொழிலே தெய்வம் என்ற கருத்தியலோடு அதிலும் புதுமை காட்டி வருகிறார்.

"டயர் கொண்டு தோல் செருப்பு" "விவசாயிகள் பயனடைவார்கள்"

"சர்க்கரை நோயாளிகளுகு செருப்பு"

வெறும் செருப்பு மட்டுமல்லாமல் ஸ்கூல் பேக், ஜல்லிக்கட்டு மாட்டின் கழுத்தில் கட்டப்படும் மணி வரை அடுத்த கட்டத்திற்கு இந்த தொழிலை முன்னெடுத்தும் வருகிறார்.



"வங்கி கடன் கிடைப்பதில்லை" "ஒரு நாள் விடியும்... அது என்னால் முடியும்"

இப்படி எந்த தொழிலும் இழிவில்லை என்பதை நமக்கு உணர்த்தும் இந்த இளைஞரின் கோரிக்கை எல்லாம்... தம்மை போன்று வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு வங்கியில் கடன் பெற்று கொடுத்து உதவிக்கரம் நீட்டி அரசு ஊக்கமளிக்க வேண்டும் என்பதேயாகும்.


Next Story

மேலும் செய்திகள்