பேங்கில் திருட சென்ற திருடனுக்கே காத்திருந்த ஷாக்.. CCTVயில் சிக்கிய காட்சி
தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி - பரபரப்பு சிசிடிவி
கேரள மாநிலம் கொல்லத்தில் இயங்கி வரும் தனியார் வங்கியில், திருடன் கொள்ளையடிக்க வந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே நிலமேல் பகுதியில் இயங்கி வரும் தனியார் வங்கிக்குள் நுழைந்த முகமுடி கொள்ளையன், மேஜைகளில் ஏதாகிலும் பணம் உள்ளதா என பார்த்துள்ளார். எந்த பணமும் இல்லாத நிலையில், ஏமாற்றத்துடன் வெளியே சென்றுள்ளார். காலை வங்கியை திறக்க வந்த ஊழியர்கள், கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் திருடனை தெடி வருகின்றனர்.
Next Story
