Trump | ``நான் கையெழுத்து போட மாட்டேன்’’ - பகிரங்கமாக மிரட்டும் டிரம்ப்
அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு டிரம்ப் மிரட்டல் புதிய வாக்காளர் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் வரை வேறு எந்த சட்டத்திற்கும் கையெழுத்திட மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் வாக்களிக்க அமெரிக்க குடியுரிமை இருப்பதை நிரூபிக்கும் ஆவணம் கட்டாயம் என்று கூறும் இந்த சட்டம் SAVE America Act என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தால் சிலர் வாக்களிக்க முடியாமல் போகலாம் என ஜனநாயக கட்சியினர் குற்றம் சாட்டும் நிலையில், தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேல் சபையான யுனைடெட் ஸ்டேட்ஸ் செனட்-க்கு அனுப்பப்பட்டுள்ள இந்த மசோதாவை நிறைவேற்ற 60 வாக்குகள் தேவைப்படுவதால் மசோதா நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருப்பவர்கள் கூட்டமாக வாக்களிப்பதாக முன்னர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்த நிலையில் , இந்த தேர்தல் சட்டம் மீண்டும் முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
