திடீரென 300 அடி உள்வாங்கிய கடல் - பீதியில் மக்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சன்னதி கடல், திடீரென 300 அடி தூரம் உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர். கடல் நீர் உள்வாங்கி சேறுப்பகுதி வெளியில் தென்பட்டது.
இதனிடையே கடல் நீர் உள்வாங்குவதும் பின்பு சகஜ நிலைக்கு வருவதும் வழக்கமான ஒன்றுதான் என மீனவர்கள் கூறியுள்ளனர். மேலும் மழைக் காலத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டால், இந்தச் சேறு கரைந்து கடலின் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது என்றும் மீனவர்கள் தெரிவித்தனர்.
Next Story
