"அமெரிக்காவிற்கு பிரசாதம் பார்சல்"...யேசுதாஸை கவுரவிக்கும் ஐயப்ப பக்தர்கள்

"அமெரிக்காவிற்கு பிரசாதம் பார்சல்"...யேசுதாஸை கவுரவிக்கும் ஐயப்ப பக்தர்கள்
Published on

பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பிறந்த நட்சத்திர தினமான இன்று சபரிமலையில் தேவசம் போர்டு சார்பாக சிறப்பு பூஜை மற்றும் நெய் அபிஷேகம் நடைபெற்றது. பாடகர் கே.ஜே.யேசுதாஸ் கடந்த 10 தேதி தனது 84 -ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். சபரிமலையில் ஐயப்பனை எழுந்தருள செய்யும் ஐயப்பசுப்ரபாதமும், இரவு நடை அடைக்கும் முன் பாடப்படும் ஹரிவாரசனம் படலையும் யேசுதாஸ் பாடியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் யேசுதாஸ் பிறந்த நட்சத்திர தினமான இன்று

சபரிமலையில் சிறப்பு பூஜை மற்றும் நெய் அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த பிரதாசம் அமெரிக்காவிலிருக்கும் யேசுதாஸூக்கு அனுப்பி வைக்கப்படும் என தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com