"நீங்களே 90 முறை தோத்தவரு.. உங்க தலைமையே கேள்விக்குறி..’’ - ராகுலுக்கு பதிலடி

x

"1952-ம் ஆண்டிலேயே தேர்தல் ஊழலுக்கு காங்கிரஸ் அடித்தளமிட்டது"

1952-ம் ஆண்டிலேயே தேர்தல் ஊழலுக்கு காங்கிரஸ் அடித்தளமிட்டதாக பா.ஜ.க எம்.பி. அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அனுராக் தாக்கூர், ராகுல் காந்தி நாட்டில் 90 முறை தேர்தல்களில் தோல்வியடைந்து சாதனை படைத்துள்ளதாக விமர்சித்தார்.

கட்சிக்குள்ளேயே ராகுல் காந்தியின் தலைமை குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதாகத் தெரிவித்த அவர்,

தேர்தல்களில் தோல்வியடையும் போது, சில நேரங்களில் அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தங்களை சுயபரிசோதனை செய்வதற்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் அரசியலமைப்பு நிறுவனங்கள் வரை அனைத்திலும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்ததாகத் தெரிவித்தார்.

பீகார் தேர்தலில் தோல்வியடைவதைக் கண்டு, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்வதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதாக அனுராக் தாக்கூர் குறை கூறினார்.

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கரை தேர்தலில் தோல்வியடையச் செய்ததாகவும்,

1952 ஆம் ஆண்டு முதல் தேர்தலிலேயே, தேர்தல் ஊழலுக்கு காங்கிரஸ் அடித்தளமிட்டதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்