Chennai MIOT Hospital | சென்னை மியாட் ஹாஸ்பிடலில் உலக விபத்து தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

Chennai MIOT Hospital | சென்னை மியாட் ஹாஸ்பிடலில் உலக விபத்து தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

#Chennai #MIOTHospital #Awareness #ThanthiTV Chennai MIOT Hospital | "முதலுதவியுடன் சிகிச்சை முடிந்துவிடக்கூடாது" - சென்னை மியாட் ஹாஸ்பிடலில் உலக விபத்து தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மணப்பாக்கம் மியாட் மருத்துவமனையில் உலக விபத்து காயத் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகச் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகரன் மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். "முதலுதவியுடன் சிகிச்சை முடிந்துவிடக்கூடாது" என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர், விபத்தில் சிக்கியோருக்கு உதவச் சட்டச் சிக்கல் அச்சமின்றிப் பொதுமக்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், தலைக்கவசம் அணிதல், சீட் பெல்ட் அணிதல் போன்ற சாலைப் பாதுகாப்பு விதிகளை அனைவரும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com